ராமராஜனின் 'சாமானியன்' ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் நாயகன் ராமராஜன் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்றும் அவர் நடிக்கயிருக்கும் திரைப்படத்திற்கு ’சாமானியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராமராஜன் துப்பாக்கியை குறிவைத்து பார்க்கும் காட்சியும் அருகே ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் இருக்கும் காட்சியும் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
கடந்த 1986ம் ஆண்டு ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமராஜன், ‘கரகாட்டம்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் என்பதும் கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் தீவிரமாக குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு ’மேதை’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ராமராஜன் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ’சாமானியன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to launch the First Look of #Saamaniyan. Congrats team.#MakkalNayagan #Ramarajan, #Radharavi & #MSBhaskar starrer @Etceteraenter @MathiyalaganV9 @direcrahesh @naksha_saran@Gopieditor @johnmediamanagr#WelcomeBackRamarajan#சாமானியன் pic.twitter.com/pvGkgdZ8Ge
— VijaySethupathi (@VijaySethuOffl) September 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments