close
Choose your channels

விஜய்சேதுபதி படத்தில் பாட்டு பாடும் விஜய் டிவி பாடகி

Saturday, May 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரமணியம்மாள் என்பவர் இரண்டாம் பரிசு பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அடிப்படை இசையறிவு இல்லாமலேயே கேள்வி ஞானத்தின் மூலம் ஸ்ருதி விலகாமல் பாடி அனைவரையும் அசத்தி வந்த ரமணியம்மாளுக்கு தற்போது சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது

விஜய்சேதுபதி நடிப்பில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கி வரும் படம் 'ஜூங்கா'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்த வந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாட ரமணியம்மாளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் இந்த படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும், இந்த பாடல் ஹிட்டாகி ரமணியம்மாளுக்கு மேலும் வாய்ப்பு குவியும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

விஜய்சேதுபதி , சாயிஷா, மடோனா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment