இறந்து விடுவேன் என பயமாக உள்ளது...! வீடியோ வெளியிட்டு கதறும் பெண்...!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண், இறந்து விடுவேன் என பயமாக உள்ளது என்று வெளியிட்ட வீடியோ காண்போர் மனதை பதைபதைக்க செய்கின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிற நகரங்களை போலவே நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற மக்கள் குவிந்து வருகிறார்கள். பலரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கும் படுக்கைகள் நிரம்பியுள்ளதால், ஊழியர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாக நெஞ்சுவலியாக உள்ளது. ஊசி போடுவதற்கு கூட மருத்துவர்கள் யாரும் வரவில்லை. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் நான் இறந்துவிடுவேன் என்று பயமாக உள்ளது என்று கதறி அழுதவாறு வீடியோ என்றாய் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காண்போர் மனதை பதைபதைக்க செய்கின்றது. கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனைகளில் ஆக்சிஜன்தேவை , படுக்கை வசதி தேவை என பொதுமக்கள் வீடியோ பதிவிட்டு வரும் சம்பவங்கள் தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.