"வெள்ளையர்கள் என்ன செய்தார்களோ அதையே இந்த அரசும் செய்கிறது" - வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா
- IndiaGlitz, [Thursday,December 19 2019]
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் பெங்களூரில் வரலாற்று ஆய்வார் ராமச்சந்திர குகா மற்றும் பலர் போராடியதற்காக கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் போராட்டங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தடையை மீறி போராட்டம் நடத்திய பலர் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர். வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தியாவின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான ராமச்சந்திர குஹா பெங்களூருவில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியதால் கைது.@Ram_Guha#bangaloreprotest #CABProtest #CitizenshipAmmendmentAct pic.twitter.com/hWfhZbb0B9
— Satheesh lakshmanan ??சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) December 19, 2019