ஓபிஎஸ் எப்போது கேரளாவுக்கு முதலமைச்சர் ஆனார்?

  • IndiaGlitz, [Tuesday,January 24 2017]

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களை இன்று கேரள முதலமைச்சர் பிணராய் விஜயன் சந்தித்து பேசினார்.

இது குறித்த தகவலை ராம் விலாஸ் பஸ்வான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த போது கேரள முதல் மந்திரி பிணராய் விஜயன் என்பதற்கு பதிலாக தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பெயரை தவறுதலாக மாற்றி பதிவு செய்து விட்டார். இந்த பதிவை பார்த்த பலர் அதில் இருந்த தவறை சுட்டிக்காட்டினர்.

பின்னர் அவர் உடனடியாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கேரள முதல் மந்திரி பிணராய் விஜயன் என திருத்தியுள்ளார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி பரவி வருவதோடு, ஓபிஎஸ் எப்போது கேரள முதலமைச்சர் ஆனார் என்று ஒருசிலர் கிண்டலுடன் பதிவு செய்து வருகின்றனர்.

More News

மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பனை இல்லை. தமிழ்நாடு வணிகர் சங்கம் அதிரடி

ஜல்லிக்கட்டு தடையை தகர்க்க லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டு தடைக்கான வெற்றியை மட்டும் பெற்றுத்தரவில்லை. பல விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த செய்துள்ளது...

நான் தடைக்கு எதிரானவன். பீட்டா உள்பட எதையும் தடை செய்ய வேண்டாம். கமல்

கடந்த சில நாட்களாக சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் இளைஞர்களின் இன்னொரு கோரிக்கை பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதுதான்.

அஜித் படம் நிறுத்தப்பட்டது எதனால் தெரியுமா? ஒரு இயக்குனரின் மனவலி

ஆர்யா நடித்த 'ஒரு கல்லூரியின் கதை' மற்றும் 'மாத்தி யோசி', அழகன் அழகி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தா பெரியசாமி. இவர் ஒருசில படங்களில் நடித்தும் உள்ளார்.

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஜல்லிகட்டு பிரச்சனை எப்படி இருந்திருக்கும். கமல் பேட்டி

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் புரட்சி போராட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் கடைசியில் வன்முறையில் இந்த போராட்டம் முடிந்தது ஒரு கரும்புள்ளியாகவே கருதப்படுகிறது.

என்னை பழிவாங்க இது சரியான நேரம் இல்லை. விஷால்

கடந்த சிலநாட்களாக நடிகர் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய வதந்திகள் பரவுவதும் அதற்கு அவர் விளக்கம் அளித்து கொண்டு வருவதுமாக உள்ள செய்திகளை பார்த்து வருகிறோம்.