ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் தண்டனை அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,August 28 2017]
ஆன்மீக அமைப்பு ஒன்றின் தலைவரான ராம் ரஹிம் சிங் என்பவர் தன்னுடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கான தண்டனை இன்று அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று முன் நீதிபதி ஹெலிகாப்டர் மூலம் சிறைக்கே சென்று தண்டனை விபரங்களை தெரிவித்தார்.
இதன்படி தண்டனை தீர்ப்புக்கு முன் இரண்டு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி, குற்றவாளி ராம் ரஹிம் சிங் அவர்களுக்கு பத்து வருடங்கள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பால் வன்முறை ஏற்படாமல் இருக்க ஏற்கனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.