ஆக்ஷன் காட்சிக்காக பயிற்சி எடுத்த பிரபல நடிகர்… விபரீதத்தில் முடிந்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கில் இயக்குநர் லிங்குசாமி இயக்கிவரும் புது படத்தில் ஹீரோவாக முன்னணி நடிகர் ராம் பொத்னேனி நடித்துவருகிறார். இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நடிகர் ராம் பொத்னேனி தனது உடம்பை முறுக்கேற்ற நினைத்து இருக்கிறார். இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவழித்த நிலையில் தற்போது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழில் “ஆனந்தம்“, “சண்டகோழி“. “ரன்“, “அஞ்சான்“, “வேட்டை“ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் லிங்குசாமி. தனது “சண்டகோழி 2” திரைப்படத்திற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னணி நடிகராக வலம்வரும் ராம் பொத்னேனியை வைத்து புது திரைப்படம் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி உருவாக்கி வந்தார். கடந்த ஒருமாதமாக ஹைத்ராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அடுத்து ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட இருந்தது.
இதற்காக நடிகர் ராம் பொத்னேனி தனது உடம்பை மேலும் முறுக்கேற்ற நினைத்து மணிக்கணக்கில் வொர்க் அவுட் செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ராம் பொத்னேனிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். மேலும் ராம் பொத்னேனிக்காக படக்குழு காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Ustaad @ramsayz's #RAPO19 shoot halted due to his Neck injury during body transformation.
— Vamsi Kaka (@vamsikaka) October 4, 2021
Will be back soon with double the energy. pic.twitter.com/a9KtfP4Br7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments