முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகன ராவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

  • IndiaGlitz, [Saturday,December 24 2016]

தமிழகத்தின் தலைமைச்செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம், தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கியடிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை திடீரென ராம மோகன்ராவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அவருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அவருக்கு எந்த மாதிரியான உடல் நலக்குறைவு ஏற்பட்டது, என்னென்ன சிகிச்சைகள் தரப்பட்டு வருகின்றன போன்ற தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடப்பத்தக்கது.

More News

ஃபோர்ப்ஸ் நட்சத்திரங்கள் பட்டியல். ரஜினியை முந்தினார் ரஹ்மான்

2016ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் 100 முன்னணி நட்சத்திரங்களை பட்டியலிட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு சீனியர் ஆகிறார் பிரபல நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

என்ன நடக்கப் போகிறது தமிழகத்தில்? துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு

சமீபத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

விஜய் படத்தை பார்த்து அழுத சமந்தாவின் காதலர்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறவுள்ளது.

தீவிரவாதிகளால் பயணிகள் விமானம் கடத்தல். 118 பயணிகள் கதி என்ன?

லிபியா நாட்டை சேர்ந்த அப்ரிகியாஸ் ஏர்பஸ் A320 விமானம் இன்று லிபியாவின் சபா நகரில் இருந்து திரிபோலி நகருக்குச் சென்று கொண்டிருந்தது.