இயக்குனர் ராமின் 'பேரன்பு' ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

'கற்றது தமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கிய படம் 'பேரன்பு. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒருசில பிரச்சனைகளால் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் ராம் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

'பேரன்பு' திரைப்படம் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என்றும், சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை குவித்த இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.

ராம் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சூர்யா பிரதாபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

More News

ஐபிஎல் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தளபதி விஜய்யின் ரசிகர்

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடந்தபோது ஐபிஎல் அணிகள் பல வீரர்களை ஏலம் எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் IX அணி, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி என்ற வீரரை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஹன்சிகாவின் சர்ச்சை புகைப்படத்திற்கு இயக்குனர் விளக்கம்

நடிகை ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் திரைப்படம் 'மஹா'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி, சாவியை முதல்வரிடம் ஒப்படைக்க முடிவு: எஸ்.வி.சேகர்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது தமிழக முதல்வரிடம் புகார் அளிக்கவுள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சன்னிலியோன்: ரசிகர்கள் குஷி

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் தற்போது 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேக்கப்மேன் முத்தப்பாவு மறைவுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படமான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அவருக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேன் முத்தப்பா நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.