ரஜினியை கிண்டல் செய்து படமெடுக்கின்றாரா ராம்கோபால் வர்மா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் ராம்கோபால் வர்மாவின் படங்கள் மட்டுமின்றி அவருடைய டுவிட்டுகளும் சர்ச்சைக்கு உரியதாக இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக லாக்டவுன் சமயத்தில் அவர் இயக்கிய படங்களும் பதிவு செய்த டுவிட்டுகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அவர் ’ஆர்ஜிவி மிஸ்ஸிங்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில் ரஜினிகாந்த் போன்ற ஒருவர் இருப்பது தெரியவந்து உள்ளது. அதில் அவர் ’ஆர்ஜிவி மிஸ்ஸிங்’ படத்தின் புதிய நடிகர் கஜினிகாந்த். வேறு யாராது ஒருவரின் சாயல் தெரிந்தால் அது முற்றிலும் தற்செயலானது’ என்றும் ராம்கோபால் வர்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியை கிண்டலடிக்கவே கஜினிகாந்த் என்ற கேரக்டரை உருவாக்கி அவரது தோற்றம் கொண்ட ஒருவரை நடிக்க வைத்துள்ள ராம்கோபால் வர்மா அந்த படத்தில் ரஜினியை கிண்டலடித்துள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே இதே படத்தின் முந்தைய போஸ்டர்களில் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் சாயலில் இருந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Introducing new actor GAJINIKANT in RGV MISSING #RgvMissing pic.twitter.com/oRmv1BwimH
— Ram Gopal Varma (@RGVzoomin) October 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com