ஒரு படம் கூட வெளிவராத நடிகையின் பெயரில் 50 போலி அக்கவுண்ட்கள்: அதிர்ச்சி தகவல் 

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

பிரபல நடிகர் நடிகைகளின் பெயரில் போலியான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு திரைப்படம் கூட இன்னும் வெளிவராத புதுமுக நடிகை ஒருவரின் பெயரில் 4 நாட்களில் 50 போலி அக்கவுண்ட்களை உருவாகியிருப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகிவரும் ’திரில்லர்’ என்ற படத்தில் அறிமுகமாகி உள்ள நடிகை அக்ஷரா ராணி. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது கடந்த 15 நாட்களுக்கு முன் புதிதாக ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் ’திரில்லர்’ திரைப்படத்தின் சில ஸ்டில்களையும் பதிவு செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் தனது பெயரில் 50க்கும் அதிகமான போலி டுவிட்டர் அக்கவுண்ட்கள் உருவாக்கியிருப்பதாகவும், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள ராம்கோபால்வர்மா ’50 போலி அக்கவுண்ட்களா? என ஆச்சரியமடைந்து உங்களை அனைவரும் தேவதைபோல் பார்ப்பதால் உங்கள் மீதுள்ள அன்பால் இவ்வாறு செய்திருக்கலாம்’ என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து சைபர் செல்லில் புகார் செய்யுங்கள் என்று ஒருசில நெட்டிசன்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிழைக்க விடமாட்டங்க போல… Huawei நிறுவனத்துக்கு வந்த அடுத்த சிக்கல்!!!

ஆப்பிள் நிறுவனத்தையே விஞ்சிய தொழில் நுட்ப சேவைகளை வழங்கிவரும் ஹீவாய் நிறுவனம் தற்போது அடுக்கடுக்கான சிக்கலைச் சந்தித்து வருகிறது.

வைரலாகும் ஸ்ரீதிவ்யா தங்கையின் நெருக்கமான நடன வீடியோ

தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதிவ்யா. சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி,

குடுமிபிடி சண்டையில் தென் சீனக்கடல் பகுதி!!! சர்ச்சைக்கு காரணம்தான் என்ன???

சீனா, தென் சீனக்கடல் பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆக்ரோஷமாக ஓடிவந்த காட்டு யானையுடன் செல்பி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர் 

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் மிக அதிகமாகி உள்ளது என்பதும் செல்பி மோகத்தால் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடன இயக்குனராக மாறும் 'ரெளடி பேபி'?

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி அகில இந்திய அளவில் புகழ் பெற்றார் என்பதும்