ஒரு படம் கூட வெளிவராத நடிகையின் பெயரில் 50 போலி அக்கவுண்ட்கள்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் நடிகைகளின் பெயரில் போலியான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு திரைப்படம் கூட இன்னும் வெளிவராத புதுமுக நடிகை ஒருவரின் பெயரில் 4 நாட்களில் 50 போலி அக்கவுண்ட்களை உருவாகியிருப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகிவரும் ’திரில்லர்’ என்ற படத்தில் அறிமுகமாகி உள்ள நடிகை அக்ஷரா ராணி. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது கடந்த 15 நாட்களுக்கு முன் புதிதாக ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் ’திரில்லர்’ திரைப்படத்தின் சில ஸ்டில்களையும் பதிவு செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் தனது பெயரில் 50க்கும் அதிகமான போலி டுவிட்டர் அக்கவுண்ட்கள் உருவாக்கியிருப்பதாகவும், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
இதற்கு பதிலளித்துள்ள ராம்கோபால்வர்மா ’50 போலி அக்கவுண்ட்களா? என ஆச்சரியமடைந்து உங்களை அனைவரும் தேவதைபோல் பார்ப்பதால் உங்கள் மீதுள்ள அன்பால் இவ்வாறு செய்திருக்கலாம்’ என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து சைபர் செல்லில் புகார் செய்யுங்கள் என்று ஒருசில நெட்டிசன்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
I don’t know whether I should feel upset or feel flattered .. There are more than 50 fake accounts created on my name in just last 4 days ??
— Apsara Rani (@apsara_rani_) July 13, 2020
Check my original in red circle and the ones after that..! pic.twitter.com/a0Z5D4WNtr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments