கடவுளை புரூஸ்லி இரண்டு குத்துக்கள் விட வேண்டும்: ராம்கோபால் வர்மா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீதேவியை இவ்வளவு சீக்கிரம் அழைத்து கொண்ட கடவுளை பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நான் நினைக்கின்றேன் கடவுள் ஒரு திமிர்பிடித்தவர் என்று. தேவையில்லாமல் புரூஸ் லீ மற்றும் ஸ்ரீதேவி போன்ற சூப்பர் மனிதர்களை தனது சக்தியின் மூலம் அழைத்து கொண்டார். கடவுளிடம் உள்ள புரூஸ்லீ அவருக்கு இரண்டு குத்துக்கள் கொடுக்க வேண்டும். ஒன்று அவரையும், இன்னொன்று ஸ்ரீதேவியை யும் அழைத்து கொண்டதற்கு' என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி நடித்த Kshana Kshanam என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோவாக வெங்கடேஷ் நடித்திருந்தார். இந்த படம் ராம்கோபால் வர்மா இயக்கிய இரண்டாவது படம் என்பதும், இந்த படம் இந்தியில் Hairaan என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments