கடவுளை புரூஸ்லி இரண்டு குத்துக்கள் விட வேண்டும்: ராம்கோபால் வர்மா

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்  ஸ்ரீதேவியை இவ்வளவு சீக்கிரம் அழைத்து கொண்ட கடவுளை பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நான் நினைக்கின்றேன் கடவுள் ஒரு திமிர்பிடித்தவர் என்று. தேவையில்லாமல் புரூஸ் லீ மற்றும் ஸ்ரீதேவி போன்ற சூப்பர் மனிதர்களை தனது சக்தியின் மூலம் அழைத்து கொண்டார். கடவுளிடம் உள்ள புரூஸ்லீ அவருக்கு இரண்டு குத்துக்கள் கொடுக்க வேண்டும். ஒன்று அவரையும், இன்னொன்று ஸ்ரீதேவியை யும் அழைத்து கொண்டதற்கு' என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி நடித்த Kshana Kshanam என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோவாக வெங்கடேஷ் நடித்திருந்தார். இந்த படம் ராம்கோபால் வர்மா இயக்கிய இரண்டாவது படம் என்பதும், இந்த படம் இந்தியில்  Hairaan என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்ரீதேவி மறைவிற்கு சச்சின் உள்பட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்த இரங்கல்களில் இருந்து தெரிய வருகிறது.

கமல் அரசியலை ஆதரிக்கின்றேனா? கவுதமி விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்த கட்சிக்கு திரையுலகில் இருந்தும் ஒருசிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமா், ராகுல்காந்தி இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவா்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனா்.

சினிமா உலகம் ஒரு திறமைசாலியை இழந்துவிட்டது: ஸ்ரீதேவி மரணம் குறித்து ரஜினிகாந்த்

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கு பேரிடியான செய்தியாக இருந்தது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் குவிந்து வருகிறது.

ஸ்ரீதேவி மரணம் குறித்து பிரபலங்கள் கூறியது என்ன தெரியுமா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.