பிரபல இயக்குனரின் மருமகள் தயாரிக்கும் படத்தில் கீர்த்திசுரேஷ்!

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

கோலிவுட் திரையுலகில் விஜய், விக்ரம், விஷால், சூர்யா, தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மருமகள் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து ராம்கோபால் வர்மாவின் மருமகள் ஷ்ரவ்யா வர்மா கூறுகையில், 'எனது முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். இது எனது கனவுப்படம். கீர்த்திசுரேஷூடன் எனது முதல் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் தில்ராஜூ, இந்த படத்தை விநியோகம் செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாகேஷ் காகுநூர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், ஆதி, ஜெகபதிபாபு உள்பட பலர் நடிக்கவுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது