ராம்கோபால் வர்மாவின் அடுத்த படத்தில் தற்காப்பு கலை வீராங்கனை: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா அவர்கள் இடையில் சில காலம் தனது சொந்த ஓட்டி தளத்திற்காக கவர்ச்சி படங்களை இயக்கினார் என்பதும் அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் இளைஞர்கள் மத்தியில் அந்த கவர்ச்சிப் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் ‘லடுகி’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் நிலையில் இந்த படம் இந்தியாவின் முதல் தற்காப்பு கலை படம் என்று விளம்பரப்படுத்தி உள்ளார்
இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ’பெண்’ என்ற பெயரில் தமிழிலும் இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் பூஜா பலேகர் என்ற தற்காப்புக்கலை வீராங்கனை முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
It’s not the greatest martial arts film , but it’s mine and @PoojaBofficial ‘s homage to the Greatest martial arts film ever ENTER THE DRAGON https://t.co/YJC74Y1HBY
— Ram Gopal Varma (@RGVzoomin) November 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com