நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்த விவகாரம்.. வேற லெவல் விளக்கம் அளித்த ராம்கோபால் வர்மா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகை ஒருவரின் காலை முத்தமிட்ட வீடியோ இணையதளத்தில் வைரல் ஆன நிலையில் அந்த வீடியோ கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் இதற்கு வேற லெவலில் அவர் விளக்கம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு, இந்தி திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களை எடுத்து உள்ளார் என்பதும் அது மட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ராம் கோபால் வர்மா இயக்கிய ’டேஞ்சரஸ்’ என்ற இந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சுமார் ஒரு மணி நேர வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோவில் ’டேஞ்சரஸ்’ நாயகி அஷ்ஷு ரெட்டி நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவளது கால் அருகே உட்கார்ந்திருந்த ராம் ராம் கோபால் வர்மா அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் காட்சி உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசும் ராம்கோபால் வர்மா கடைசியில் திடீரென நடிகை அஷ்ஷு ரெட்டியின் காலை முத்தமிடும் காட்சியை உள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான எதிர்மறை கமெண்ட்ஸ் பதிவான நிலையில் இதற்கு ராம்கோபால் வர்மா வேற லெவல் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கம் பின்வருமாறு:
நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது. காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிவு செய்துள்ளார்.
The DANGEROUS emotion I felt when sitting at the feet of #AshuReddy is what I learnt from @_apsara_rani ‘s DOG whose insta I’d is https://t.co/Go23M7w5Kg pic.twitter.com/ilwPwjMdYd
— Ram Gopal Varma (@RGVzoomin) December 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com