இந்த உத்தரவை பிறப்பித்தால் யாருக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' பார்க்கும் ஆசை வராது: ராம்கோபால் வர்மா!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசு இந்த உத்தரவை பிறப்பித்தால் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பார்க்க யாருக்கும் ஆசை வராது என சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்திற்காக புரமோஷன் மிகச் சிறப்பான அளவில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு நான் ஒரு ஐடியா சொல்கிறேன். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பார்க்க இரண்டு தடுப்பூசி செலுத்தாத யாரையும் அனுமதிக்கமாட்டோம் என உத்தரவு போடுங்கள், அதன் பிறகு யாருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் பார்ப்பதற்கான ஆசையே வராது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்றும் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பே இல்லை என்றும் எஸ்எஸ் ராஜமௌலி தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
I have a GREAT idea for the GOVERNMENT regarding OMICRON??????…They should not allow anyone into #RRR theatres unless they show proof of DOUBLE DOSE ..The DESIRE to see #RRR will CONQUER the CARELESSNESS of the PEOPLE ??????
— Ram Gopal Varma (@RGVzoomin) December 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com