சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா....! நாயகியுடன் நடனமாடும் புதிய வீடியோ வைரல்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்ச்சை என்ற வார்த்தைக்கு பெயர் போனவர் என்று சொன்னால், அது இயக்குநர் ராம் கோபால் வர்மா தான். தான் இயக்கும் படங்களிலும், பேசும் பேச்சுக்களிலும், செயல்களிலும், சமூக வலைதள பதிவுகளிலும் சர்ச்சையை கிளப்பி விடுவார். அண்மையில் கூட ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்தது குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். இதே போல ஒருசில வருடங்களுக்கு முன் வருண் தேஜ், சாய் தரம் தேஜ், பவன் கல்யாண், ராம் சரண் போன்ற ஸ்டார்கள், நடிகர் சிரஞ்சீவி அவர்களின் வெற்றியை உறிஞ்சியே வாழ்கிறார்கள் என்று எடக்கு மடக்காக பேசியிருந்தார்.
இந்தநிலையில் ராம் கோபால் வர்மா, தெலுங்கு நடிகை இனாயா சுல்தானா-உடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அண்மையில் இந்த நடிகைக்கு பிறந்தநாளாம். அந்த பார்ட்டியில் பங்குபெற்ற இயக்குனர் எல்லை மீறி, உருகி உருகி சுல்தானாவுடன் டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த நடிகை வர்மா-வின் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம்.
இணையத்தில் வெளியான இந்த காணொளி சர்ச்சையை கிளப்ப "அதில் உள்ளது நானில்லை, அந்த நடிகையும் சுல்தானாவும் இல்லை. அவரை பார்த்தால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாதிரி தெரிகிறது " என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை நடிகையும் ரீ-டுவிட் செய்திருந்தார்.
பின்பு சில நாட்கள் கழித்து "அந்த வீடியோவில் டான்ஸ் ஆடிய அழகி இனாயா சுல்தானா இவர்தான்" என்று அந்த நடிகை புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோ தான் சமூகவலைத்தளங்களில் தற்போது உலாவி வருகிறது.
I once again want to clarify that the guy in this video is not me and the Girl in Red is not @inaya_sultana and I swear this on American President JOE BIDEN pic.twitter.com/K8nNera7Rc
— Ram Gopal Varma (@RGVzoomin) August 22, 2021
With the beautiful @inaya_sultana my dancing partner in the viral video pic.twitter.com/4jRGwn1Mh6
— Ram Gopal Varma (@RGVzoomin) August 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments