GST ரிலீசுக்கு முந்தைய நாளில் ராம்கோபால்வர்மா மீது வழக்குப்பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
GST என்று கூறப்படும் 'God Sex and Truth' என்ற வெப் திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் பெண்கள் அமைப்பை சேர்ந்த சமூக சேவகி ஒருவர் ஐதராபாத் காவல்நிலையத்தில் ராம்கோபால் வர்மா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 'ராம்கோபால் வர்மா, ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட முயற்சிப்பதாகவும், இதுகுறித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ராம்கோபால் வர்மா மீது இந்திய குற்றவியல் சட்டம் 506 மற்றும் 509 பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை திட்டமிட்டபடி இணையதளத்தில் இந்த படம் வெளிவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
'God Sex and Truth' என்ற படத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் கவர்ச்சியான புகைப்படங்களை ராம்கோபால்வர்மா சமீபத்தில் தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் என்பதும் தெரிந்ததே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments