ராம்சரண் தேஜா மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி.. அவர் அணிந்திருந்த உடை இத்தனை லட்சமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி துபாயில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் சரண் தேஜாவின் மனைவி அணிந்த உடை மற்றும் இலட்சக்கணக்கில் என்று கூறப்படுகிறது.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ராம்சரண் தேஜா என்பதும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பதும் தெரிந்ததே.
இவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் ஹைதராபாத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணமாகி பத்து ஆண்டுகள் கழித்து தற்போது உபாசனா கர்ப்பமாகி உள்ள நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் துபாயில் நடைபெற்றது. இதில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபசன்னாவின் உடை மட்டும் ஒன்றரை லட்சம் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com