திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை.. ராம்சரண் - உபாசனா மகளின் பெயர் இதுதான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனாவுக்கு சமீபத்தில் மகள் பிறந்த நிலையில் அந்த செல்ல தேவதையின் பெயர் குறித்த அறிவிப்பை தம்பதிகள் வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராம்சரண் தேஜா என்பதும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ராம்சரண் தேஜா உபாசனா திருமணம் நடந்து 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு உபாசனா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அந்த மகளின் பெயர் ’க்ளின் காரா கோனிடெலா’ என்று வைத்துள்ளனர்.
தங்கள் குழந்தையின் தொட்டில் போடும் விழாவை நிறைவு செய்த பின்னர் இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் இந்த பெயரை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரசிகர்கள் அந்த குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments