close
Choose your channels

பிரபல நடிகையை புரமோஷனுக்கு வரவேண்டாம் என கூறிய ராம்சரண் தேஜா: என்ன காரணம்?

Saturday, April 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள ’ஆச்சார்யா’ என்ற படத்தின் புரமோஷனுக்கு பிரபல நடிகையை வரவேண்டாம் என இந்த படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜா கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

சிரஞ்சீவி, ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், சோனுசூட் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’ஆச்சார்யா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தை கொரடலா சிவா இயக்கியுள்ளார் என்பதும் மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனை படக்குழுவினர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்கு தான் வருவதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். ஆனால் காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும், நீங்கள் புரமோஷனுக்கு வரவேண்டாம் என்றும் உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் ராம்சரண் தேஜா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதே நேரத்தில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்திற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புரமோஷன் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment