ஷங்கர் படத்தின் மாஸ் அப்டேட்டை கொடுத்த ராம்சரண் தேஜா: வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்.சி.15’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் நடந்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பஞ்சாப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து ’ஆச்சார்யா’ படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாகவும் ராம்சரண் தேஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பஞ்சாபில் இருந்து ஆந்திராவுக்கு விமானத்தில் திரும்பும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’ஆர்.சி.15’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் என தெரிகிறது.

More News

நடிகை குஷ்புவுக்கு என்ன ஆச்சு?  வைரலாகும் மருத்துவமனை புகைப்படங்கள்

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்த நாகசதன்யா!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை பிரிந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக ஊடகங்கள்

விக்ரமின் 'கோப்ரா' படத்தின் சிங்கிள் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாயாஜாலம்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

பழிவாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா? 'சாணிக்காகிதம்' டீசர் மற்றும் ரிலீஸ் தேதி!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'சாணிக்காகிதம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக

நான் வாட்டர்பேபி: நீச்சல் குளத்தில் குறும்பு செய்யும் ராஷ்மிகா மந்தனா!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நீச்சல்குளத்தில் குறும்பு செய்து கொண்டே 'நான் வாட்டர்பேபி'  என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது