'தனி ஒருவன்' வெற்றியை விட மகிழ்ச்சி அடைகிறேன். மோகன் ராஜா

  • IndiaGlitz, [Sunday,December 11 2016]

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா நடித்த 'தனி ஒருவன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'துருவா' கடந்த வெள்ளியன்று வெளியாகி தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அனைத்து ஊடகங்களும் 'துருவா' படத்திற்கு பாசிட்டிவ் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இந்த படம் 'தனி ஒருவன்' படத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துருவா குழுவினர் 'தனி ஒருவன்' இயக்குனர் மோகன் ராஜாவுக்கு நன்றி கூறியுள்ளனர். இந்த நன்றிக்கு தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ள மோகன் ராஜா, 'தனி ஒருவன்' வெற்றி பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சியைவிட 'துருவா' வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.