close
Choose your channels

ஜெயம் ரவிக்காக குதிரை சவாரி செய்யும் ராம்சரண் தேஜா

Sunday, May 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'ஜெயம்' சகோதரர்களின் 'தனி ஒருவன்' என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவி ஏற்ற ஐ.பி.எஸ். வேடத்திற்கு தயாராக ராம்சரண் தேஜா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சைக்கிளிங், குதிரை சவாரி ஆகிய பயிற்சிகளில் ராம்சரண் தேஜா ரெகுலராக ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் அந்த கேரக்டருக்காக அவர் முற்றிலும் தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
'தனி ஒருவன்' படத்தில் நயன்தாரா நடித்த கேரக்டரில் ராகுல் ப்ரித்திசிங் அவர்களும் அரவிந்தசாமியின் கேரக்டரில் அரவிந்தசாமியும் நடிக்கவுள்ளனர். சுரேந்தர் ரெட்டி இந்த படத்தை இயக்கவுள்ளார். தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment