இது எங்கள் முடிவு… 10 வருடம் கழித்து குழந்தை பெறப்போகும் பிரபல நடிகரின் மனைவி கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம்வரும் நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையின் வரவுக்காக உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் 10 வருடம் கழித்து முதல் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான காரணம் குறித்து உபாசனா மனம் திறந்துள்ளார்.
தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் தனது கல்லூரி நாட்களில் பழகிய தோழியான உபாசனா காமினேனி கொனிடேலா என்பவரைக் காதலித்து கடந்த ஜுன் 2012 இல் திருமணம் செய்துகொண்டார். இந்தக் காதல் தம்பதிகள் சமீபத்தில் தங்களது 10 ஆவது திருமண விழாவைக் கொண்டாடினர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உபாசனா தனது பிறந்த நாளில் கருப்பம் ஆகியிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைப் பெற்றுக்கொள்வது பற்றிய காரணத்தையும் தற்போது கூறியுள்ளார்.
அதில், சமூகம் விரும்பும்போது அல்ல, நாம் விரும்பும்போது நான் தாயாக மாறுவதைத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பெருமைப்படுகிறேன். திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இப்போது ஒரு குழந்தையைப் பெறவுள்ளோம். நாங்கள் இருவரும் வளர்ந்து வருகிறோம். இருவரும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகளை நாங்களே கவனித்துக் கொள்ளலாம். இது சிறந்த நேரம் என்று நான் நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், இது எங்கள் முடிவு… ஒரு ஜோடியாக வெளியில் உள்ள சமூகத்திலிருந்தோ, எங்கள் குடும்பத்திலிருந்தோ அல்லது வெளியாட்களிடமிருந்தோ எங்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. இது எங்கள் உறவு மற்றும் நாங்கள் எப்படிப் போகிறோம் என்பதைப் பற்றி நிறைய கூறுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ராம் சரண் பிரபல டிவி ஷோவான குட்மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதனால் ராம்சரண் – உபாசனா தம்பதிகளின் குழந்தை அமெரிக்காவில்தான் பிறக்கப் போகிறது என்பதுபோன்ற கருத்துகள் உலா வந்தன. இதற்கு விளக்கம் அளித்து உபாசனா எங்களது குழந்தை இந்தியாவில் அதுவும் உலகத்தரம் வாய்ந்த அப்பல்லோ மருத்துவமனையிலேயே பிறக்கும் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் இந்தப் பயணம் எங்களுக்குப் பல அற்புதமான அனுபவங்களைத் தருகிறது. எங்கள் வாழ்வில் இந்தப் புதிய கட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். சமூகத்திற்காக அல்ல, எங்களுடைய முடிவினால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைப்பெற்றுக் கொள்கிறோம் என்று உபாசனா கூறியிருக்கும் இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com