ராகுல் ப்ரித்திசிங் விடுத்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு?

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ராகுல் ப்ரித்திசிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கார்த்தியுடன் அவர் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் தற்போது சூர்யா-செல்வராகவன் படம், கார்த்தியின் படம் மற்றும் சிவகார்த்திகேயன் படம் என தமிழில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் ராகுல் ப்ரித்திசிங் நடிக்கும் ஒருசில தமிழ், மற்றும் இந்தி படங்களில் இன்னொரு பிரபல நாயகிகள் ஒப்பந்தமாகி வருவதாகவும், ராகுல் இரண்டாவது ஹீரோயினியாக தள்ளப்படுவதாகவும் வதந்திகள் வெளிவந்தது.

இதனை கடுமையாக மறுத்துள்ள ராகுல் ப்ரித்திசிங், நான் இப்போதும் முதல்தர நாயகியாகத்தான் நடித்து வருகிறேன். ஒருவேளை என்னுடைய கேரக்டரை எந்த இயக்குனராவது டம்மியாக்கினால் அந்த படத்தில் இருந்து விலகிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு என்பது இனிமேல் தான் தெரியவரும்