close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு பட ஹீரோயின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, July 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' என்ற சூப்பர் ஹிட் படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'அகிரா' வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் குறித்து மாறுபட்ட தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன.
முதலில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரிணித்தி சோப்ரா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் வந்த தகவலின்படி இந்த படத்தில் ராகுல் ப்ரித்திசிங் நடிப்பார் என்று கூறப்பட்டது. எனினும் இயக்குனர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாததால் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில் சற்று முன்னர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் 'தனது அடுத்த படத்தின் ஹீரோயின் ராகுல் ப்ரித்திசிங் என்பதை உறுதி செய்துள்ளார். இதனால் இந்த படத்தின் நாயகி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்படுகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment