அப்பா எடுத்த ஹாட் பிகினி புகைப்படம்; ரகுல் ப்ரித்திசிங்கின் இன்ஸ்டா பதிவு!

  • IndiaGlitz, [Sunday,November 22 2020]

கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ மற்றும் சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த முன்னணி நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரகுல் ப்ரீத்தி சிங் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவு சுற்றுலா சென்றார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே காஜல்அகர்வால், வேதிகா, ப்ரணிதா சுபாஷ் உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவில் உள்ள நிலையில் ரகுலும் தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார். பச்சை நிற பிகினியுடனும், சகோதரருடன் கவர்ச்சி உடையிலும், கடற்கரை மணலில் வில் போல் வளைந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்தார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆரஞ்சு நிற பிகினி உடை அணிந்து உட்கார்ந்து இருப்பது போல் உள்ள புகைப்படம் ஒன்றை ரகுல் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை தனது அப்பா தான் எடுத்தது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.