close
Choose your channels

நீச்சல் குளத்தில் ரகுல் ப்ரீத்திசிங்கை முதுகில் சுமக்கும் இந்த இளைஞர் யார்? வைரல் புகைப்படம்!

Tuesday, May 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத்தி சிங் இளைஞர் ஒருவரின் முதுகில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் ரகுல் ப்ரித்தி சிங். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ’அயலான்’, கமல்ஹாசனுடன் ’இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல்பிரீத்சிங் நேற்று சகோதரர் தினத்தை முன்னிட்டு தனது சகோதரருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். நீச்சல்குளத்தில் தனது சகோதரரின் முதுகில் ஏறி உட்கார்ந்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் சகோதரர் தினத்திற்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை சுமார் 8 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள் என்பதும் அதில் நடிகைகள் ராஷ்மிகா, ரெஜினா ஆகியோர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment