கடல் நடுவே அந்தரத்தில் பிகினியில் கலக்கும் சூர்யா-கார்த்தி பட நடிகை!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தேவ்’ மற்றும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ஆக்டிவ்வாக இருந்து வரும் ரகுல் ப்ரீத்தி சிங் சற்று முன்னர் பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடல் நடுவே அந்தரத்தில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சல் போன்ற ஒன்றில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ரகுல் ப்ரீத்தி சிங் சிரித்து கொண்டிருப்பது போன்று இந்த புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு அவர் ’தினந்தோறும் நான் சிரிப்பது ஒன்றை மட்டுமே உடற்பயிற்சியாக செய்து வருகிறேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.