close
Choose your channels

'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் அமலாபால் வேடத்தில் தமிழ் நடிகை?

Sunday, August 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ராட்சசன்’. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ராக்ஷசுடு என்ற டைட்டிலில் படமாக்கப்பட்டது என்பதும் இந்தப் படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கை அடுத்து தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. விஷ்ணுவிஷால் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை ரமேஷ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ’ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் நடித்த கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்த நிலையில் இந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத்சிங் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது அக்ஷய் குமார் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்த ரகுல் ப்ரீத்தி சிங் ’ராட்சசன்’ இந்தி ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து அவருக்கு இன்னொரு வெற்றிப்படம் உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. சைக்கோ திரில்லர் ’ராட்சசன்’ ராட்சசன் திரைப்படம் தமிழ் தெலுங்கை போலவே இந்தியிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment