ஒருவர் மீது ஒருவர் படுத்து யோகா.. சமீபத்தில் திருமணமான நடிகையின் யோகா புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

சமீபத்தில் திருமணமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் செய்த யோகா குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளின் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங் என்பதும் இவர் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்தது. மேலும் அவர் தற்போது இரண்டு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் இணைந்து செய்த யோகா குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதில் ரகுல் ப்ரீத் சிங் தனது கணவருடன் வித்தியாசமான பொசிஷன்களில் யோகா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்பட தொகுப்பில் உள்ள ஒரு புகைப்படத்தில் ரகுல் மீது அவரது கணவர் படுத்து கொண்டு செய்யும் யோகாவும் உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது.