சூர்யா, கார்த்திக் பட நாயகிக்கு கொரோனா பாதிப்பு…

  • IndiaGlitz, [Tuesday,December 22 2020]

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிசியான இளம் நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். இவர் கார்த்தியுடன் தீரன், சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் படு பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளார். அதில் தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தனக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ள ரகுல், தன்னை சந்தித்தவர்கள் நிச்சயம் டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதேபோல தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக கருதப்படும் தமன்னாவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் தற்போது உடல்நலம் பெற்று விட்டார் என்ற தகவலும் பின்னர் வெளியானது.

More News

தங்கையாரே..... கனிமொழி எம்பிக்கு கமல், ரஜினி பட நடிகை எழுதிய கடிதம்!

சமீபத்தில் நெல்லையில் பேட்டியளித்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் ரஜினி, கமலுக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று கூறியிருந்தார்

மேக்ஸ்வெல்லை காப்பாற்றிய ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிரா: ருசிகர வீடியோ

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தூக்கி அடித்த பந்து மேலே சென்று போட்டியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிராவை பலமாக தாக்கி கீழே விழுந்ததால்

ஜவுளிக்கடை தீவிபத்தின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் திடீரென மதுரையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

உங்களை அடித்தால் பிரச்சனை வரும்: திடீரென பின்வாங்கிய சிரஞ்சீவி!

வில்லன் நடிகர்களை ஹீரோ புரட்டி எடுக்கும் வகையில் காட்சிகள் அமைப்பதுதான் காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது திடீரென வில்லன் நடிகரை

அர்ப விஷயத்துக்காக… கேப்டனையே பொது இடத்தில் சுட்டுக் கொன்ற பயங்கரம்!!!

தென் கொரியா கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் படு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது.