அபுதாபி வெள்ளை டவரில் நம்மூர் தேவதை… சூர்யா, கார்த்தி பட நடிகையின் அட்டகாசமான புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அபுதாபியில் தற்போது நடைபெற்று வரும் ஐஐஎஃப்ஏ சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தியுடன் நடித்த நடிகை ஒருவர் அபுதாபி டவரில் நின்றுகொண்டிருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் லைக்ஸ்களை இறைத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’, நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘என்ஜிகே’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். தமிழை தவிர தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்துவரும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்துவருகிறார். வொர்க்அவுட், பிட்னஸ் போன்ற விஷயங்களிலும் படு கவனம் செலுத்திவரும் இவர் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் இன்ஸ்டாவில் பதிவிடும் பிகினி புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தன. இந்நிலையில் அபுதாபியிலுள்ள யாஸ் தீவில் தற்போது இந்தியத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதற்காக அபுதாபி சென்ற நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அங்குள்ள வெள்ளை நிற டவரில் வெள்ளை ஆடையோடு அட்டகாசமான புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் அதேபோல நடிகர் பாவில் குலாட்டியுடன் இணைந்து ‘ஐ லவ் யூ’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Adhiran Ravi
Contact at support@indiaglitz.com