சூர்யா, கார்த்திக் பட நாயகியின் வெறித்தனமான வொர்க் அவுட்… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக இருக்கும் இளம் நடிகை ரகுல்ப்ரீதி சிங். தற்போது பாலிவுட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் “மே டே” படத்தின் படப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜ்தேவ் கனுக்கு இவர் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. கொரோனா நேரத்தில் பல பிரபலங்கள் தங்களது வொர்க் அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருந்தனர். அந்த வகையில் ரகுல்ப்ரீதி சிங்கின் வொர்க் அவுட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் வைரலாகி இருக்கிறது.
இளம் நடிகையான ரகுல் ஏற்கனவே தமிழில் நடிகர் கார்த்தியுடன், “தேவ்” “தீரன்” போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். அதேபோல சூர்யாவுடன் “என்.ஜி.கே“ வின் நாயகியாகவும் நடித்து இருந்தார். தெலுங்கிலும் இவர் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அதைத்தவிர கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் “இந்தியன் 2” படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” உள்பட ஒரு சில புதிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியில் உருவாகிவரும் “மே டே” படத்தின் படப்பிடிப்பில் தற்போது பிசியாக இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு செல்வதற்காக இவர், தங்கிய இருந்த ஹோட்டலில் இருந்து 12 கி.மீ தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தற்போது ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ கடும் வைரலாகி இருக்கிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரகுல்ப்ரீதி சிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து குணமாகி தற்போது படப்பில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com