மாலத்தீவில் வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏற்கனவே பல சினிமா பிரபலங்கள் அங்குள்ள கடற்கரை மற்றும் ஸ்பாக்களில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் அங்குள்ள கடற்கரையில் தனது இனிமையான பொழுதை கழித்துவருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அவருக்கு ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத் தொடர்ந்து அரை டஜன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது இந்தியா முழுக்கவே அறியப்படும் நடிகையாக உயர்ந்துள்ளார்.
மேலும் நடிகர் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து இவர் நடித்துள்ள திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து காண்டம் பரிசோதகராக இவர் நடித்திருக்கும் “Chhatriwali“ திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதியும் பிரபல நடிகர் அபிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுடன் இவர் நடித்துள்ள திரைப்படம் “Runway 34“ வரும் ஏப்ரல் 29 ஆம் தேதியும் வெளியாகவுள்ளன. அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் தமிழில் நடித்திருக்கும் “அயலான்“ திரைப்படமும் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்குள்ள கடற்கரை பகுதிகளில் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் அது வேறலெவல் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments