மாலத்தீவில் வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏற்கனவே பல சினிமா பிரபலங்கள் அங்குள்ள கடற்கரை மற்றும் ஸ்பாக்களில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் அங்குள்ள கடற்கரையில் தனது இனிமையான பொழுதை கழித்துவருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அவருக்கு ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத் தொடர்ந்து அரை டஜன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது இந்தியா முழுக்கவே அறியப்படும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

மேலும் நடிகர் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து இவர் நடித்துள்ள திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து காண்டம் பரிசோதகராக இவர் நடித்திருக்கும் “Chhatriwali“ திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதியும் பிரபல நடிகர் அபிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுடன் இவர் நடித்துள்ள திரைப்படம் “Runway 34“ வரும் ஏப்ரல் 29 ஆம் தேதியும் வெளியாகவுள்ளன. அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் தமிழில் நடித்திருக்கும் “அயலான்“ திரைப்படமும் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பிசியான நடிகையாக வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்குள்ள கடற்கரை பகுதிகளில் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டுள்ள நிலையில் அது வேறலெவல் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது

More News

'வாழ்க்கையில நேர்மையா இருக்குறதை விட சாமர்த்தியமா இருக்குறது முக்கியம்: 'மாறன்' டிரைலர்

தனுஷ் நடித்த 'மாறன்' திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

டிடியை அடுத்து சுந்தர் சி படத்தில் இணைந்த பிக்பாஸ் தமிழ் நடிகை!

சுந்தர் சி இயக்கி வரும் மூன்று நாயகன் மற்றும் மூன்று நாயகிகள் திரைப்படத்தில் நேற்று டிடி இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் டிடியை அடுத்து தற்போது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில்

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தமிழ் நடிகை… வைரலாகும் புகைப்படம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான “பரதேசி“ திரைப்படத்தில் உருண்டையான கண்களை வைத்துக்கொண்டு தனது

உக்ரைனில் நடக்கும் போருக்கு என்ன காரணம்? சுருக்கமான விளக்கம்!

பழைய சோவியத் ஒன்றியத்தில் ஒன்றாக இருந்த தன்னுடைய நட்பு நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுப்பதற்கு என்ன காரணம்?

மார்ச் மாத ஓடிடி படங்கள்: 'வலிமை' எந்த தேதியில் ரிலீஸ்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டது மட்டுமின்றி 100 சதவீத