டூ பீஸ் பிகினி.. மாலத்தீவு கடற்கரையில் மஞ்சள் மோகினி ரகுல் ப்ரீத் சிங்..!
- IndiaGlitz, [Friday,June 02 2023]
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் மஞ்சள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு அவர் ’என்னமோ ஏதோ’ என்ற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்த நிலையில் தெலுங்கு திரையுலகில் பிஸியானார்.
இதனை அடுத்து மீண்டும் தமிழில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் ’என்.ஜி.கே’ ’தேவ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’இந்தியன் 2’ ’அயலான்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் பக்கத்திற்கு 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் மாலத்தீவில் மஞ்சள் டூ பீஸ் பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன. மாலத்தீவுக்கு கடற்கரையில் மஞ்சள் மோகினி ரகுல் ப்ரீத் சிங் என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.