நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு என்ன ஆச்சு? படுத்த படுக்கையாய் மருத்துவமனையில்..!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

நடிகை ரகுல் ப்ரீத் சிங் படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் என்பதும், சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2 ’படத்திலும் அவர் முக்கிய இடத்தில் நடித்திருப்பதும் தெரிந்தது.

இந்நிலையில், தற்போது ஒரு பாலிவுட் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல, சில நாட்களுக்கு முன் ஜிம்மில் பாதுகாப்பு பெல்ட் அணியாமல் 80 கிலோ எடையை தூக்கி, அந்த நேரத்தில் முதுகு தசை பிசகியதாகவும், இதனால் வலி அதிகமாக உள்ளதனால் டாக்டரை சந்தித்து, தற்போது படுக்கையாக ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பைத்தியக்காரத்தனமாக நான் செய்த ஒரு வேலையால் முதுகு வலி அதிகமாகி, 6 நாட்கள் படுக்கையாக இருக்கிறேன். படுக்கையில் இருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. முழுமையாக குணமடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு நல்ல பாடம், உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது என்பதையும் புரிந்து கொண்டேன். என்னுடைய உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.