நீலக் கடலுக்கு நடுவே நீச்சல் உடையில் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் கவனம் ஈர்த்த நடிகையாக வலம்வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக கடந்த 2014 இல் “என்னமோ ஏதோ“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதற்குப் பிறகு “தீரன் அதிகாரம்“, “என்ஜிகே“, “தேவ்“ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றார்.
அதேபோல தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் தற்போது இந்தி சினிமாவில் பிசியான நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் காண்டம் பரிசோதகராக இவர் நடிக்கும் Chhatriwali படத்தின் டிரெய்லர் வெளியாகியது. சினிமா பிரபலங்கள் பலரும் நடிக்க தயங்கும் இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாத்தில் ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் “Attack“, “Runway 34“, “Doctor“, “Thank God“, “Mission Cindrella“ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதைத்தவிர தமிழில் நடிகர் சிவகார்த்திக்கேயனின் “அயலான்“, நடிகர் கமலுடன் “ இந்தியன்2“ போன்ற படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நீலம் போர்த்திய கடலுக்கு நடுவே நீச்சல் உடையணிந்திருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்குகளை அள்ளித் தெளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com