close
Choose your channels

பிக்பாஸ் ரக்சிதா நடிக்கும் படம் பெண்களுக்கு எதிரானதா? 'எக்ஸ்ட்ரீம்' குறித்து இயக்குனர் ராஜவேல்

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி நாயகி ஆக நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் பெண்களுக்கு எதிரான படம் என்று கூறி வருவதை இயக்குனர் ராஜவேல் மறுத்துள்ளார்.

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்கள் நடித்த ரக்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் அவர் நாயகியாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’எக்ஸ்ட்ரீம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சிகர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரக்சிதா மகாலட்சுமி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ’அயலி’ தொடரில் நடித்த அபி நட்சத்திரா முக்கிய இடத்தில் நடிக்க ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், ராஜ்குமார், சிவம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராஜ் பிரதாப் என்பவர் இசையமைக்கிறார்.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றும் ’எக்ஸ்ட்ரீம்’ என்றால் உச்சகட்டம் என்றும் அளவுக்கு அதிகம் என்றும் சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் உள்ளது, ஆனால் அதை மீறும் போது தான் எக்ஸ்ட்ரீம் என்று சொல்லுவோம், அதை வைத்து தான் நாங்கள் இந்த படத்தின் டைட்டில் வைத்துள்ளோம்.

இந்த படத்தில் கூறப்படும் கருத்து பெண்களுக்கு எதிரானது என்று கூறி பலர் நடிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் ரக்சிதா மகாலட்சுமி துணிந்து இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment