விவாகரத்து உறுதியாகிவிட்டதா? பிக்பாஸ் ரக்சிதாவின் பதிவால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரக்சிதா என்பதும் இவர் மிகவும் சிறப்பாக விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி சென்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய கணவர் தினேஷ் இந்த சீசனில் போட்டியாளராக விளையாடி வருகிறார்.
தினேஷ் மற்றும் ரக்சிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தினேஷ் பிக்பாஸ் வீட்டில் பலமுறை அவர் கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ரக்சிதா பிடிவாதமாக தினேஷை வீட்டு பிரிய வேண்டும் என்று இருப்பதாகவும் தினேஷ் மீது அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் கூட செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் திடீரென ரக்சிதா தனது சமூக வலைதளத்தில் இன்று ஒரு பதிவு செய்துள்ளார். அதில், ‘ இறக்கும் நேரம் வரும் போது இறந்து விட வேண்டும் என்று நினைக்கும் நபர்களின் நானும் ஒருவர். என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ’நிம்மதியான வாழ்கை, வாழு, வாழ விடு’ ஆகிய ஹேஷ்டேக்குகளை பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு தினேஷிடம் இருந்து விவாகரத்து கிடைத்து விட்டதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தினேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தான் இது குறித்த முழு தகவல்கள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com