இதுபோன்ற முட்டாள்கள் இன்னும் வளர வேண்டும்: ரக்சிதா கணவரின் இந்த போஸ்ட் யாருக்காக?

இவர்கள் போன்ற முட்டாள் ஆண்கள் இன்னும் வளரவேண்டும் என ரக்சிதாவின் கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா சூப்பராக விளையாடி வருகிறார் என்பதும் அவர் கண்டிப்பாக 100 நாள் வரை தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரக்சிதாவை சுற்றி சுற்றி ராபர்ட் மாஸ்டர் வருவது க்யூட்டாக இருந்தாலும் ஒரு திருமணமான பெண்ணை ஒருவர் சுற்றி வருவது நியாயமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் ரக்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் ரக்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்றே தினேஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவ்வப்போது ரக்சிதா நன்றாக விளையாடி வருகிறார் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்.



இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண் சிரித்து பேசி எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டால் அவர் அனைத்துக்கும் தயார் என்று அர்த்தம் அல்ல. எல்லா மனிதர்களும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு சில முட்டாள் ஆண்கள் இன்னும் வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடிக்கடி ராபர்ட் மாஸ்டர் ரக்சிதாவை காதலுடன் பேசி வருவதை அடுத்தே தினேஷ் சற்று காட்டமாக இந்த பதிவை செய்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.