ஃபேன் பாயாக இருந்தவன் இப்போது ஃபேமிலி பாய்.. 'வேட்டையன்' குறித்து ரக்சனின் பதிவு..!
- IndiaGlitz, [Monday,October 14 2024]
ஃபேன் பாயாக இருந்த நான் தற்போது ஃபேமிலி பாயாக மாறிவிட்டேன் என்று ஆர்.ஜே. ரக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’வேட்டையன்’ திரைப்படத்தில், ரக்சன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினி, மஞ்சு வாரியர் ஆகியோருடன் சில காட்சிகளில் நடித்திருந்த நிலையில் அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், ’வேட்டையன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் தனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக ரக்சன் கூறியுள்ளார். ஃபேன் பாயாக இருந்த நான் இப்போது ஃபேமிலி பாயாக மாறிவிட்டேன். நீங்கள் காட்டும் அன்பு மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி, என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ’வேட்டையன்’ படத்தில் ரஜினி மற்றும் மஞ்சு வாரியருடன் நடித்த சில காட்சிகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரக்சனின் இந்த பதிவுக்கு ஷிவாங்கி, ஆர்.ஜே. விஜய் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ’வேட்டையன்’ படத்தில் நடிப்பதற்காக கதாநாயகனாக நடிக்க வந்த இரண்டு வாய்ப்புகளை தான் தவிர்த்ததாக ஒரு பேட்டியில் ரக்சன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.