தனுஷின் நிஜ வாழ்க்கை பாடல் தான் 'ரகிட ரகிட' பாடலா? சந்தோஷ் நாராயணன்

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

பொதுவாக மாஸ் ஹீரோக்களுக்கு அறிமுக பாடல் என்றாலே அந்த பாடலும் மாஸ் ஆகத்தான் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களுக்கு அறிமுக பாடல் கம்போஸ் செய்யும் போது அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள், சம்பவங்களும் இடம் பெறுவது போன்று பாடல்கள் அமைப்பது உண்டு.

அந்த வகையில் ‘ரகிட ரகிட’ பாடல் தனுஷின் நிஜ வாழ்க்கையை குறிப்பிடும் வகையில் இந்த பாடலை கம்போஸ் செய்து உள்ளோம் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். தனுஷிடம் உள்ள மேனரிசம் அவரது வாழ்வில் நடந்த விஷயங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த பாடலை எழுதியதால், இந்த பாடலின் வரிகளுக்கு சரியாக பொருந்தும் வகையில் கம்போஸ் செய்ததாகவும், இந்த பாடலை கேட்டவுடன் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்பட அனைவருக்கும் பிடித்துவிட்டதாகவும், நாங்கள் எதிர்பார்த்தது போலவே ரசிகர்களிடம் இருந்தும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும் இந்த பாடலை படத்தில் பார்க்கும்போது நாம் நிஜ தனுஷையே காணலாம் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.

கோவிட் நேரத்தில் அனைவரும் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட இந்த பாடல் உதவியது என்று கூறலாம் என்றும், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் தான் என்று சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

More News

தமிழ் பிரபலத்தின் பயோபிக்கில் நடிக்க பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான் ஆர்வம்!

செஸ் விளையாட்டில் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டதையும் 5 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுள்ள தமிழ்நாட்டு பிரபலம் விஸ்வநாதன் ஆனந்த் குறித்து

கொரோனா மூன்றாவது அலை, எப்படி இருக்கும்...!ஜோதிடர் அபிக்யா கூறுவது என்ன..?

கொரோனா குறித்து சென்ற 2019-லே சரியாக கணித்து கூறியவர் தான் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் .

ஏழைகளுக்கு இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கிய சூர்யா, கார்த்தி பட நாயகி!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “மாஸ்”, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சகுனி” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கொரோனா நேரத்தில்

கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த தமிழ் நடிகை

கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஒரு வழக்கில் கைது செய்தனர் என்பதும், இதனையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே

உடலுறவு மூலம் பரவும் வைரஸ்… புற்றுநோயாக மாறும் கொடுமை? தவிர்ப்பது எப்படி!

புற்றுநோய் வகைகளில் கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பதும் ஒன்று. இந்தப் புற்றுநோய் 99% உடலுறவின்போது வெளிப்படும்  (Human Papilloma Viruses-HPV) எனும்