என் ஆணுறை விளம்பரத்தை பார்த்து அரசு ஏன் பயப்படுகிறது? பிரபல நடிகை கேள்வி

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் 'என் ச்கியே மற்றும் 'கம்பீரம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடித்த ஆணுறை விளம்பரம் ஒன்று நாடு முழுவதும் பிரபலமானது. ஆனால் இந்த விளம்பரம் வெளியான ஒருசில நாட்களில் காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரை ஆணுறை விளமபரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது

இதுகுறித்து கருத்து கூறிய ராக்கி சாவந்த், 'சன்னி லியோன், பிரபாஷா பாசு ஆகியோர் ஆணுறை விளம்பரத்தில் நடித்த போது அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் நான் நடித்த ஆணுறை விளம்பரம் பிரபலமான போது மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது.

என் விளம்பரம் பிரபலமானதால் அரசுக்கு அவ்வளவு பயமா? அப்படி அரசுக்கு என்ன பிரச்சினை? என்னை குறி வைத்தே இந்த விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் இந்த விளம்பரத்தில் ஒரு சேவை மனப்பான்மையுடன் தான் நடித்தேன். ஆணுறை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றால் இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாவார்கள். இதை அரசு விரும்புகிறதா? மேலும் குழந்தைகளும் ஆணுறை குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தூங்கிய பின்னர் ஒளிபரப்புவதில் என்ன பயன்? பிரதமர் மோடி எனக்கு ஆதரவளித்து அரசின் இந்த முடிவை மாற்றுவார் என நம்புகிறேன்' என்று ராக்கி சாவந்த் கூறியுள்ளார்..

More News

கடைசி விவசாயிக்கு கை கொடுக்கின்றாரா ரஜினிகாந்த்?

'காக்கா முட்டை' என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன், இரண்டாவதாக இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா? ஹர்திக் பட்டேல் அதிரடியால் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளிலும்வெற்றி பெற்றனர்.

பத்மாவதி' படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் அளித்து நிபந்தனையும் விதித்த சென்சார் போர்டு

பத்மாவதி' என்ற டைட்டிலை 'பத்மாவத்' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்றும், 26 இடங்களில் கட் செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் விதித்த நிபந்தனைகளை

தமிழ்நாட்டை காப்பாற்ற ரஜினியும் தேவை: அன்புமணி

'அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் ரஜினி சீக்கிரம் வந்தால் நல்லது. அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். முதலில் அவர் சொல்லட்டும்

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது