மல்யுத்த வீராங்கனையுடன் மோதி உடம்பை புண்ணாக்கிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது பாலிவுட் திரையுலகம் ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் தேவையில்லாமல் மோதி அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநித்தில் WWE வீரர் தி கிரேட் காளியின் மல்யுத்த அகாடமியில் CWE என்ற மல்யுத்த போட்டி நடந்தது. இந்த போட்டியின் தொடக்க நாளில் நடிகை ராக்கி சாவந்த் நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடியதுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மல்யுத்த போட்டி ஒன்றில் ரொம்பல் என்ற வீராங்கனை வெற்றி பெற்றபோது திடீரென மேடையேறிய ராக்கி சாவந்த் தன்னுடன் மோதுமாறு மல்யுத்த வீராங்கனைக்கு சவால்விட்டார்.

தொழில்முறை வீராங்கனையான ரொபல், ஒரே ஒரு குத்துவிட்டவுடன் சுருண்டு விழுந்து மயக்கமடைந்த ராக்கியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து சோகத்துடன் ராக்கி சாவந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராக்கி சாவந்த், சரத்குமார் நடித்த 'கம்பீரம்' என்ற தமிழ்ப்படத்திலும் பல இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது