close
Choose your channels

ராஜு முருகன் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் ஹீரோவா? நாயகி யார் தெரியுமா?

Sunday, July 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராஜு முருகன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி குறித்த தகவல்களும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளது.

தமிழ் திரையுலகில் ’குக்கூ’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பத்திரிகையாளர் ராஜு முருகன் அதன்பின்னர் ’ஜோக்கர்’,’ஜிப்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில் கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் ’ஜப்பான்’ படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் ராஜுமுருகன் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை சைத்ரா அச்சார் என்பவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் தான் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணியை விரைவில் ராஜு முருகன் தொடங்குவார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ராஜு முருகனின் முந்தைய படமான ’ஜப்பான்’ எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment